Translate

Wednesday, 5 November 2014


மணப்பெண்ணின் சத்தியம்....


காதல் கணவா உந்தன் கரம் விடமாட்டேன்

சத்தியம் சத்தியம் இது சத்தியமே...



தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே

சத்தியம் சத்தியம் இது சத்தியமே...



ஒரு குழந்தைப் போலே, ஒரு வைரம் போலே,

தூய்மையான என் சத்தியம் புனிதமானது...



வாழை மரம் போலஎன்னை வாரி வழங்குவேன்...

ஏழைக் கண்டபுதையல் போலரகசியம் காப்பேன்...



கணவன் என்றசொல்லின் அர்த்தம் கண் அவன் என்பேன்...

உனது உலகை எனதுக் கண்ணில்  பார்த்திடச் செய்வேன்...



மழை நாளில் உன் மார்பில் கம்பளி ஆவேன்...

மலை காற்றாய் தலைக் கோதி நித்திரை தருவேன்...



காதல் கணவா உந்தன் கரம் விடமாட்டேன்

சத்தியம் சத்தியம் இது சத்தியமே...



தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே

சத்தியம் சத்தியம் இது சத்தியமே...




உனது உயிரை எனது வயிற்றில் ஊற்றிக் கொள்வேன்...

உனது வீரம், எனது சாரம் பிள்ளைக்குத் தருவேன்...



கால மாற்றம் நேரும் பொழுது கவனம் கொள்வேன்...

கட்டில் அறையில், சமையல் அறையில் புதுமைச் செய்வேன்....



அழகுப் பெண்கள் பழகினாலும் அய்யம் கொள்ளேன்...

உன் ஆண்மை நிறையும் போது உந்தன் தாய் போல் இருப்பேன்...



உன் கனவுகள் நிஜமாகஎனையே தருவேன்...

உன் வாழ்வு மண்ணில் நீளஎன்னுயிர் தருவேன்....



காதல் கணவா உந்தன் கரம் விடமாட்டேன்

சத்தியம் சத்தியம் இது சத்தியமே...



தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே

சத்தியம் சத்தியம் இது சத்தியமே...



ஒரு குழந்தைப் போலே, ஒரு வைரம் போலே,

தூய்மையான என் சத்தியம் புனிதமானது...

Tuesday, 7 October 2014

மின்னல் ஒன்று - சித்திர​ சோலை



மின்னல் ஒன்று கண்ணில் வந்து வெட்கப்பட்டது...
ஊமை நெஞ்சின் மெளனம் இன்று கீதம் சொன்னது...
வானவில் இங்கே பாலமானது...
கானல் நீரிங்கே கங்கையானது...
நீ தொட்டு தந்தால் கூளாங்கல்லும் வைரமாகுது...

கடலோரம் மணல் யாவும் நீ நடந்தால் அது மகரந்தம்...
காகிதப்பூ நிறமாரும், நீ பார்த்தால் அது தேனூறும்...
உன் கண்ணில் என் பார்வை தெரிகின்றது...
விண்மீன்கள் மண்மீது மலர்கின்றது...
எது வானம் தெரியாமல் மனம் தாவுது...

நாடோடி தென்றலிது, பூவாசம் இதில் நீ தந்தது...
கரையேறி நதி வந்தது, என் நெஞ்சில் அலை கொஞ்சியது...
உன் நாணம் செவ்வானம் போலானது...
உன் கூந்தல் என் காதல் சிறகானது...
என் பூமி உன்னால்தான் உருவானது...

Sunday, 28 September 2014


Nilaoliyin Thanimaiyil Naan

Nilavinoliyin azhagai kandu,
Indru mayanggi nindren…
Manathil etho oru aekkam,
Ivvezhilai unnudan sernthu rasithal….

Sillena Tendral mei silirkkaveika,
Malargal than vasantha kaalatthin vaasam veesa,
Nilavin oli vensamaram pol nammel padara,

Untholil nan sainthu, aaruthal theda…
Un kai en thalaikotha…
En viral unnudal neeva…
Enna oru ezhil kaatchi…

Unnodu naan irunthal,
Ammaavasaiyum pournami iravuthan….
Anaithum thayaar…
Aanalllllll………….
Arugil nee enge??????
Aaga ithuvum aayiratthil oru kanavu…
Oru oomai kanda kanavu….

Aayul aekkatthudan,
Indru naan………………….
<Mitra>
17/04/2014, 3.04 a.m.