மணப்பெண்ணின் சத்தியம்....
காதல் கணவா உந்தன் கரம்
விடமாட்டேன்
சத்தியம்
சத்தியம் இது சத்தியமே...
தாய் வழி வந்த எங்கள்
தர்மத்தின் மேலே
சத்தியம்
சத்தியம் இது சத்தியமே...
ஒரு குழந்தைப் போலே, ஒரு வைரம்
போலே,
தூய்மையான
என் சத்தியம் புனிதமானது...
வாழை மரம் போல என்னை
வாரி வழங்குவேன்...
ஏழைக் கண்ட புதையல் போல
ரகசியம் காப்பேன்...
கணவன் என்ற சொல்லின் அர்த்தம்
கண் அவன் என்பேன்...
உனது உலகை எனதுக் கண்ணில் பார்த்திடச்
செய்வேன்...
மழை நாளில் உன் மார்பில்
கம்பளி ஆவேன்...
மலை காற்றாய் தலைக் கோதி நித்திரை
தருவேன்...
காதல் கணவா உந்தன் கரம்
விடமாட்டேன்
சத்தியம்
சத்தியம் இது சத்தியமே...
தாய் வழி வந்த எங்கள்
தர்மத்தின் மேலே
சத்தியம்
சத்தியம் இது சத்தியமே...
உனது வீரம், எனது சாரம்
பிள்ளைக்குத் தருவேன்...
கால மாற்றம் நேரும் பொழுது
கவனம் கொள்வேன்...
கட்டில்
அறையில், சமையல் அறையில் புதுமைச்
செய்வேன்....
அழகுப்
பெண்கள் பழகினாலும் அய்யம் கொள்ளேன்...
உன் ஆண்மை நிறையும் போது
உந்தன் தாய் போல் இருப்பேன்...
உன் கனவுகள் நிஜமாக எனையே
தருவேன்...
உன் வாழ்வு மண்ணில் நீள
என்னுயிர் தருவேன்....
காதல் கணவா உந்தன் கரம்
விடமாட்டேன்
சத்தியம்
சத்தியம் இது சத்தியமே...
தாய் வழி வந்த எங்கள்
தர்மத்தின் மேலே
சத்தியம்
சத்தியம் இது சத்தியமே...
ஒரு குழந்தைப் போலே, ஒரு வைரம்
போலே,
தூய்மையான
என் சத்தியம் புனிதமானது...

