Translate

Tuesday, 7 October 2014

மின்னல் ஒன்று - சித்திர​ சோலை



மின்னல் ஒன்று கண்ணில் வந்து வெட்கப்பட்டது...
ஊமை நெஞ்சின் மெளனம் இன்று கீதம் சொன்னது...
வானவில் இங்கே பாலமானது...
கானல் நீரிங்கே கங்கையானது...
நீ தொட்டு தந்தால் கூளாங்கல்லும் வைரமாகுது...

கடலோரம் மணல் யாவும் நீ நடந்தால் அது மகரந்தம்...
காகிதப்பூ நிறமாரும், நீ பார்த்தால் அது தேனூறும்...
உன் கண்ணில் என் பார்வை தெரிகின்றது...
விண்மீன்கள் மண்மீது மலர்கின்றது...
எது வானம் தெரியாமல் மனம் தாவுது...

நாடோடி தென்றலிது, பூவாசம் இதில் நீ தந்தது...
கரையேறி நதி வந்தது, என் நெஞ்சில் அலை கொஞ்சியது...
உன் நாணம் செவ்வானம் போலானது...
உன் கூந்தல் என் காதல் சிறகானது...
என் பூமி உன்னால்தான் உருவானது...